Blogroll

Tuesday, 25 September 2012

அம்மா

ஊருக்கு உதவாக்கரை என்றாலும்
உனக்கு நான் உத்தமன்
உன் பேச்சை கேட்காத பிள்ளை என்றாலும்
உன் பாசத்திற்குரிய பிள்ளை
நீ சமைத்த உணவை குறை கூறிய எனக்கு
இன்று பத்து மணி நேரத்திற்கு மேலாக உணவு ருசி அறியாமல் இருக்கிறது
ஏதேதோ கடைகளில் உண்ணும் போது கலங்குகிறது என் கண்கள்
அதை பார்க்கும் கண்களுக்கு என் நாக்கு தரும் பதில் ‘காரம்
உன் அருகில் இருந்த நாட்களில் உன் உயரம் தெரியவில்லை
இன்று உன்னை விட்டு பல மையில் பிரிந்து இருக்கும் போது தெரிகிறது உன் பாசம்
இதை செய்த காலத்தை என்ன செய்வது
என்னையும் உன்னையும் பிரித்து வைத்ததற்கு கோபமா.....!
இல்லை, உன் மேல் இருந்த பாசத்தை புரிய வைத்ததற்கு நன்றியா....?
கருவில் சுமந்த என்னை இன்றும் – உன்
நினைவில் சுமக்கிறாய்... சுமையாய் இல்லாமல் சுகமாய்...!
-ராஜ்


Sunday, 23 September 2012

ஆன்லைன் ஸ்டோரேஜ்

           கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறை இப்ப கொஞ்ச காலமாதான் பிரபலமா இருக்கு... ஆனா பல ஆண்டு காலமாவே பைல்களை  இணையதளத்தில் சேவ் செய்து வைத்திடும் வசதி இருந்து வருகிறது.அப்படிப்பட்ட தளங்களை பற்றி தான் இங்கு பார்க்கப் போகிறோம்.என்னதான் பைல்களை சிடி,டிவிடி கள்ள ஸ்டோர் பண்ணி வச்சாலும் எதிர்காலத்துல நாம அதுல உள்ள தகவல்களை இழக்க வாய்ப்புகள் அதிகம்.இத்தகைய இழப்புகளை தவிர்ப்பதற்காகவே பல இணைய தளங்கள் இலவசமாகவும்,கட்டணம் செலுத்தியும் பைல்களை சேவ் செய்யும் வசதியை தருகின்றன.இதோ அத்தகைய இணைய தளங்களில் சில,


தஞ்சை மாவட்டம்


தஞ்சை மாவட்டம்
      இம் மாவட்டத்தின் பெயர்க்காரணம், புராண காலத்தில் தஞ்சன் எனும் அரக்கன் இவ்விடத்தில் மக்களைத் துன்புறுத்தி வந்தான் என்றும், மக்களைக் காக்க சிவபெருமான் அவனை வதம் செய்த இடமாதலால் தஞ்சாவூர் என்று பெயர் வந்ததாகவும் கூறுகின்றனர்.தமிழையும் தமிழர்களையும் பெருமை படுத்தக்கூடிய எண்ணற்ற சிறப்புகளை தன்னிடம் கொண்டுள்ளது இம்மாவட்டம்.


Saturday, 22 September 2012

பிரைவேட் போல்டர்


                  யூசர் அக்கவுண்ட் உருவாக்கி கம்ப்யூட்டரைப் பயன்படுத்தினாலும்


Tuesday, 18 September 2012

மழலை

உலகின் செல்வங்கள் அனைத்தையும்,
உன் காலடியில் கொட்டிக் கொடுத்தாலும்,
உன் சிறிய புன் சிரிப்பிற்கு அது விளையாகாது.....!
உலகின் அத்தனை இன்பங்களையும்,
அனுபவித்தாலும் அது,
உன் ஒற்றைச் சொல்லுக்கு ஈடாகாது.....!
முழுமை பெறாத 'அம்மா' என்ற உன் சொல் கூட
மழலை மொழியில் வெளிப்படும் போது,
ஆயிரம் யுகம் இருந்த தவத்திற்கு கிடைத்த வரமாய் தோன்றுகிறது!
உன் ஒவ்வொரு அசைவையும் அழியாத,
எண்ணங்களின் கலவையால் - என்
நெஞ்சச் சுவர்களில் வரைந்து கொண்டிருக்கிறேன்!
உன் புன்னகைகளை என் இதயத்தில்,
பொக்கிசமாய் சேமித்துக் கொண்டிருக்கிறேன்!
எத்தனை முறை பார்த்தாலும் - நீ வெளிப்படுத்தும்
சோம்பல் கூட எனக்கு ரவிவர்மாவின்,
ஓவியமாகத்தான் தோன்றுகிறது!
என் செல்வமே நீ தூங்கும் போது என் இமைமூடாது,
ரசிப்பதும் தனி சுகமாய்த்தான் இருக்கிறது........!

- சூர்யநிலா


பிரிவு....!

இரவின் பிடியினில்  உலகமே உறங்குகிறது,
நான் மட்டும் விழித்துக் கொண்டு....
தலையணையில் முகம் புதைத்து உன் நினைவை
என் மதியில் வருகை பதிவு செய்கிறேன் உன் பிரிவால்.....!

-ராஜ்


Wednesday, 5 September 2012

மௌனம்....!


வாய் மூடாமல் பேசுகிறவன் இன்று
கண்களால் பேசுகிறேன் உன்னுடன் - என்
விழி உன்னை பார்க்கும் ஒவ்வொரு நொடியிலும் 
மௌன - (ம) - ஆகிறது என் தாய்மொழி


- ராஜ்


Tuesday, 4 September 2012

கம்ப்யூட்டர் விரைவாக ஷட் டவுண் ஆக.....

                              கணினி பயன் படுத்துவதே வேலை நேரத்தை குறைப்பதற்காகத் தான். கணினியிலும் விரைவாக வேலை செய்ய இதோ


திண்டுக்கல் மாவட்டம்

                                              திண்டுக்கல் என்ற உடனே எல்லார்க்கும் முதல்ல நினைவுக்கு வர்றது பூட்டு 2வது பிரியாணி. திண்டுக்கல் மாவட்டம் 1985ம்


Monday, 3 September 2012

தமிழகத்தின் மாவட்டங்கள்.............
                              தமிழகத்தில் மொத்தம்  32 மாவட்டங்கள் உள்ளன.இதில் 10  மாநகராட்சிகளும் அடங்கும்.(2012ன் படி).


Saturday, 1 September 2012

ஹைக்கூ.....

செந்தனலும் குளிர்கிறது எனக்கு ,
என் சிந்தனையில் நீ இருப்பதால்…..!

- ராஜ்


கவிதை


என் கண்கள் பார்க்கும்,
          திசையெல்லாம் நீ தான்......
என் பயணமும் நீ தான்,
    என் பாதையும் நீ தான்,
         நீ நடக்கும் பாதையில் நான் இருப்பேன்,
"உன் கால் தடமாக......!"

- SS


தமிழகத்தின் மாவட்டங்களும் அதன் சிறப்புகளும்......!

தமிழகத்தின் மாவட்டங்கள் பற்றியும் அதன் சிறப்புகள் பற்றியும் கூற இருக்கிறேன்......(எனக்கு தெரிந்த வரையில்) முதலில் கூறப்போவது மதுரை மாவட்டத்தைப் பற்றி......!
மதுரை மாவட்டம்
     தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரம் மதுரை. உலகின் மிகத்தொன்மையான நகரங்களில் ஒன்று.(2000ஆண்டுகளுக்கு மேல் தொன்மை வாய்ந்தது).தென்னிந்திய திருத்தலங்களின் நுழைவு வாயிலாகக் கருதப்படுவது இதன் சிறப்பு..... மேலும் மல்லிகை பூ, கோவில்கள்,சித்திரைத் திருவிழா,தெப்பத் திருவிழா, போன்ற எண்ணற்ற சிறப்புகளும் உண்டு.மதுரைக்கு தூங்காநகரம்,ஆலவாய்,கோவில் நகரம், நான்மாடக்கூடல்  என்கின்ற சிறப்பு பெயர்களும் உண்டு.முருகக் கடவுளின் அறுபடை வீடுகளில் இரண்டு மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.