Blogroll

Showing posts with label ராஜ் கவிதைகள். Show all posts
Showing posts with label ராஜ் கவிதைகள். Show all posts

Thursday, 29 January 2015

காதலை சுமக்கும் மனமும் ,

கர்பத்தை சுமக்கும் பெண்ணும் ஒன்று ...

அந்த ஓர் உயிர்கள் ஈருயிரக பிரியும் ,

வலியில் மட்டுமே வேறுபடுகிறது ...

ஒன்று இன்பமான வலி .., மற்றொன்று மரண வலி.....!

-ராஜ் 


என் கன்னத்தில் இருக்கும் உன் 

நெற்றி குங்குமம் அழகு ...

என் சட்டை பட்டனில் ஒட்டியிருக்கும் உன் 

கூந்தல் முடி அழகு ...

என் மார்பில் உன் காதணி 

பதித்த தடம் அழகு ...

என் விடியலின் அழகையும் மிஞ்சுகிறது 

உன் மொத்த அழகு ...!

- ராஜ் 


          மேகமில்லாமல் மழை பொழிகிறது...,

               மங்கை அவள் நினைவால் ....!

          கோடையும் குளிர்கிறது ...,

               கோதை அவள் பார்வையால் ...!

          கானல் நீரும் கடலாய் தெரிகிறது ...,

               கன்னி அவள் கைகோர்த்து நடந்தால்...!

          காகம் கரைவதும் கண்ணன் கீதமாய் கேட்கிறது ...,

               காரிகை அவள் இதழ் அசைந்தால் ...!

          மொத்தத்தில் வானத்தின் வண்ணத்தை பிரதிபலிக்கும் கடலாய் ...,

     என்னவளின் எண்ணங்களை பிரதிபலிக்கும் கண்ணாடி ஆகிறேன் நான் ......!

- ராஜ் 


Wednesday, 28 January 2015


இமைப்பதை மறுக்கிறது என் இமைகள் ..,

மனதிலோ ஒரு வித பரபரப்பு அதிகரிக்கிறது ...,

சுவாசத்தின் சதவிகிதமோ சராசரியை மிஞ்சுகிறது ....,

ஐந்தரை அடி உயரமும் அர்த்தமற்று நிற்கிறது .....,

உன்னை சந்தித்தவேளையில்.........!

-ராஜ் 



பார்வை ஆயிரம் எண்ணங்களை சொல்ல ..,

வார்த்தைகளை மறந்து வாய்மொழி மௌனமாக ...

சேருமிடம் மறந்து கால்கள் நதியென நடக்க ..,

உடல் மட்டும் ஓரிடம் இருக்க ..,

உயிர் ஓர் உறைவிடம் தேடுகிறது ....

அது உன் நினைவாக இருக்க ஏங்குகிறது .....!

-ராஜ் 


Tuesday, 27 January 2015



சுற்றி நான்கு சுவர்களுக்குள் இருக்கும் ...

தனிமை துன்பத்திலும் ஓர் இன்பம் ..,

என் நினைவுகளில் உன் நினைவு வரும்போது ...!

நீர் துளி பட்ட பறவை போல் ...

சிலிர்கிறது இதயம் ..,

என் நினைவுகளில் உன் நினைவு வரும்போது ...!

-ராஜ் 


காதலா....? கோபமா....?


பருவம் உணர்த்தாத காதலை உன் பார்வை உணர்த்தியது..,

     உன் பார்வை பட்ட இடமெல்லாம் உன் ஸ்பரிசத்தை உணர்த்தியது...,

          உன்னை சந்திக்கும் போதெல்லாம் சலனமற்ற மனது 

ஆர்ப்பரிக்கும் கடலாய் மாறுகிறது...!

      அலையாய் வருபவனை ஒவ்வொரு முறையும் 

            அமைதியாக .., திரும்ப வைக்கிறது உன் பார்வை ....!

என் வார்த்தைகளை மௌனமாக்கும் அந்த பார்வையின் அர்த்தம் 


                                        காதலா....? கோபமா....?

- ராஜ் 


Monday, 1 December 2014

நினைவுகள்



உன்னை பார்த்த முதல் நொடி ,

நான் என் மனதை இழந்தேன்  ...

நீ என்னை பார்த்த முதல் பார்வையில் ,

நான் என்னை இழந்தேன்...

நாம் இருவரும் சந்தித்த நொடிகளில் ,

நாம் நம்மை இழந்தோம் ...

இன்று ஏதேதோ காரணங்கள் சொல்லி நீ ,

நம் காதலை இழக்க துணிந்தாய் .

நான் நம் காதலுக்காக இன்று, 

என்னையே இழக்க துணிந்தேன் .

இழப்பின் மறு பெயர் தான் காதலா...?

இல்லை நிச்சயமாக இல்லை ...

ஒவ்வொரு இழப்பின் பின்னும் இருக்கும் ,

நினைவுகள் வெறும் காலடிச்சுவ்டுகள் இல்லை....,

காலச்சுவடுகள்.........!



- ராஜ் 


Sunday, 24 November 2013

அப்பா


முகம் மறைத்த்து மண்ணுள் இருந்து மேலிருக்கும் பூவை,

தாங்கி அதற்கு வர்ணமும் வாசமும் தரும் வேர் போல 

என் சரிவுகளில் என்னை தாங்கும் தோழனாய் ,

என் தவறுகளை திருத்தும் குருவாய் ,

நல் வ்ழி நடத்தும் தலைவனாய்,

என் மேல் எனக்கு இல்லாத நம்பிக்கையை என் மேல் வைத்து ,

என் நலமே தன் நலமாக கருதும் ஒரே உறவு  - அப்பா 


இந்த மூன்றெழுத்தில் உள்ள பாதுகாப்பும் பாசமும் அளவிடமுடியாதது........!


- ராஜ் 


Wednesday, 14 November 2012


காதலுக்காக எதையும் இழப்பேனென்றேன்
அவள் இழக்க சொன்னது காதலை...!
அதையும் இழக்கிறேன்.....,
என் காதலிக்காக அல்ல
என் காதலுக்காக......!
-ராஜ்



Friday, 19 October 2012

விழித்துக்கொண்டே என்னை கனவு காண வைத்தவளே  
 என் கனவெல்லாம் நிஜமாகும் நாள் எந்நாளோ....!
திங்களின் குளுமையிலும் தென்றலின் வருடலிலும்
உன் ஸ்பரிசத்தின் இருக்கத்தில் நான் இருக்கும் நாள் எந்நாளோ....!
 நிழலில் கற்பனையில் இருந்து என் கவிதைகளில் வாழும் நீ  
 நினைவில் என் மனதில் அமர்ந்து என்னுடன் வாழும் நாள் எந்நாளோ....!

-ராஜ்


Tuesday, 25 September 2012

அம்மா

ஊருக்கு உதவாக்கரை என்றாலும்
உனக்கு நான் உத்தமன்
உன் பேச்சை கேட்காத பிள்ளை என்றாலும்
உன் பாசத்திற்குரிய பிள்ளை
நீ சமைத்த உணவை குறை கூறிய எனக்கு
இன்று பத்து மணி நேரத்திற்கு மேலாக உணவு ருசி அறியாமல் இருக்கிறது
ஏதேதோ கடைகளில் உண்ணும் போது கலங்குகிறது என் கண்கள்
அதை பார்க்கும் கண்களுக்கு என் நாக்கு தரும் பதில் ‘காரம்’
உன் அருகில் இருந்த நாட்களில் உன் உயரம் தெரியவில்லை
இன்று உன்னை விட்டு பல மையில் பிரிந்து இருக்கும் போது தெரிகிறது உன் பாசம்
இதை செய்த காலத்தை என்ன செய்வது
என்னையும் உன்னையும் பிரித்து வைத்ததற்கு கோபமா.....!
இல்லை, உன் மேல் இருந்த பாசத்தை புரிய வைத்ததற்கு நன்றியா....?
கருவில் சுமந்த என்னை இன்றும் – உன்
நினைவில் சுமக்கிறாய்... சுமையாய் இல்லாமல் சுகமாய்...!
-ராஜ்


Tuesday, 18 September 2012

பிரிவு....!

இரவின் பிடியினில்  உலகமே உறங்குகிறது,
நான் மட்டும் விழித்துக் கொண்டு....
தலையணையில் முகம் புதைத்து உன் நினைவை
என் மதியில் வருகை பதிவு செய்கிறேன் உன் பிரிவால்.....!

-ராஜ்


Wednesday, 5 September 2012

மௌனம்....!


வாய் மூடாமல் பேசுகிறவன் இன்று
கண்களால் பேசுகிறேன் உன்னுடன் - என்
விழி உன்னை பார்க்கும் ஒவ்வொரு நொடியிலும் 
மௌன - (ம) - ஆகிறது என் தாய்மொழி


- ராஜ்


Saturday, 1 September 2012

ஹைக்கூ.....

செந்தனலும் குளிர்கிறது எனக்கு ,
என் சிந்தனையில் நீ இருப்பதால்…..!

- ராஜ்


Thursday, 30 August 2012

ஆசை


விடிந்தும் உன் கூந்தல் தரும்,
        இருளில் துயில ஆசை!
கண்விழிக்கும் நேரத்தில் உன் விழி
        என்னைப் பார்க்க ஆசை!
உணவு அருந்தும் போது உன் விரல் ருசி
       என் ‘நா’ அறிய ஆசை!
மாலை நேரத்தில் உன் விரல் கோர்த்து
        வீதியில் வலம் வர ஆசை!
மழை விழும் போது நீ என் இரு கரங்களின்
        அணைப்பில் இருக்க ஆசை!
உன் தூக்கத்தின் கனவை நான்
        கண் விழித்து ரசிக்க ஆசை!
உன் விழி நீர் பார்க்கும் முன்னே
        என் உயிர் பிரிய ஆசை! - அந்த பிரிவும் ,
உன் மடியில் இருக்க ஆசை!
                                                                         - ராஜ்