Blogroll

Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Thursday, 29 January 2015

காதலை சுமக்கும் மனமும் ,

கர்பத்தை சுமக்கும் பெண்ணும் ஒன்று ...

அந்த ஓர் உயிர்கள் ஈருயிரக பிரியும் ,

வலியில் மட்டுமே வேறுபடுகிறது ...

ஒன்று இன்பமான வலி .., மற்றொன்று மரண வலி.....!

-ராஜ் 


என் கன்னத்தில் இருக்கும் உன் 

நெற்றி குங்குமம் அழகு ...

என் சட்டை பட்டனில் ஒட்டியிருக்கும் உன் 

கூந்தல் முடி அழகு ...

என் மார்பில் உன் காதணி 

பதித்த தடம் அழகு ...

என் விடியலின் அழகையும் மிஞ்சுகிறது 

உன் மொத்த அழகு ...!

- ராஜ் 


          மேகமில்லாமல் மழை பொழிகிறது...,

               மங்கை அவள் நினைவால் ....!

          கோடையும் குளிர்கிறது ...,

               கோதை அவள் பார்வையால் ...!

          கானல் நீரும் கடலாய் தெரிகிறது ...,

               கன்னி அவள் கைகோர்த்து நடந்தால்...!

          காகம் கரைவதும் கண்ணன் கீதமாய் கேட்கிறது ...,

               காரிகை அவள் இதழ் அசைந்தால் ...!

          மொத்தத்தில் வானத்தின் வண்ணத்தை பிரதிபலிக்கும் கடலாய் ...,

     என்னவளின் எண்ணங்களை பிரதிபலிக்கும் கண்ணாடி ஆகிறேன் நான் ......!

- ராஜ் 


Wednesday, 28 January 2015


இமைப்பதை மறுக்கிறது என் இமைகள் ..,

மனதிலோ ஒரு வித பரபரப்பு அதிகரிக்கிறது ...,

சுவாசத்தின் சதவிகிதமோ சராசரியை மிஞ்சுகிறது ....,

ஐந்தரை அடி உயரமும் அர்த்தமற்று நிற்கிறது .....,

உன்னை சந்தித்தவேளையில்.........!

-ராஜ் 



பார்வை ஆயிரம் எண்ணங்களை சொல்ல ..,

வார்த்தைகளை மறந்து வாய்மொழி மௌனமாக ...

சேருமிடம் மறந்து கால்கள் நதியென நடக்க ..,

உடல் மட்டும் ஓரிடம் இருக்க ..,

உயிர் ஓர் உறைவிடம் தேடுகிறது ....

அது உன் நினைவாக இருக்க ஏங்குகிறது .....!

-ராஜ் 


Tuesday, 27 January 2015



சுற்றி நான்கு சுவர்களுக்குள் இருக்கும் ...

தனிமை துன்பத்திலும் ஓர் இன்பம் ..,

என் நினைவுகளில் உன் நினைவு வரும்போது ...!

நீர் துளி பட்ட பறவை போல் ...

சிலிர்கிறது இதயம் ..,

என் நினைவுகளில் உன் நினைவு வரும்போது ...!

-ராஜ் 


காதலா....? கோபமா....?


பருவம் உணர்த்தாத காதலை உன் பார்வை உணர்த்தியது..,

     உன் பார்வை பட்ட இடமெல்லாம் உன் ஸ்பரிசத்தை உணர்த்தியது...,

          உன்னை சந்திக்கும் போதெல்லாம் சலனமற்ற மனது 

ஆர்ப்பரிக்கும் கடலாய் மாறுகிறது...!

      அலையாய் வருபவனை ஒவ்வொரு முறையும் 

            அமைதியாக .., திரும்ப வைக்கிறது உன் பார்வை ....!

என் வார்த்தைகளை மௌனமாக்கும் அந்த பார்வையின் அர்த்தம் 


                                        காதலா....? கோபமா....?

- ராஜ் 


Monday, 15 December 2014

நீ.....


நான் உன்னை சிலிர்க்க செய்யும் ..., 

தென்றல் காற்றாய்  மாற நினைத்தேன் ..!
ஆனால் ,      நீயோ....! 

என் சுவசக்காற்றாய் மாறிவிட்டாய் ...!

- சூர்ய நிலா 


Wednesday, 3 December 2014

காதல்



                      மூடிய ..,

                               என் கண்களுக்குள்ளும் ...,

                                         உன் முகம் ....!

                               உன் முகத்தில் தெரியும் அத்தனை ...

                                        உணர்வுகளையும், என்னால் எப்படி ,

                              இத்தனை தெளிவாக காணமுடிகிறது 

                                        அத்தனை காதலா உன் மீது .......?

- சூர்ய நிலா 


இதுதான் காதலா ........!


                உன்னை பார்த்தது முதல் ,

                      என் கண்களும் சிரிக்க கற்றுக்  கொண்டன... 

                            என் இதயத் துடிப்பைக்  கூட சங்கீதமாய் உணர்கிறேன் ...

               இதற்கு முன் எப்போதும், 

                       இப்படி நினைத்ததில்லை.... 

               முதல் முறை புதிதாய் உணர்கிறேன் .,

                      முதன்  முதலாய் ....,

                              என்னை சுற்றி உள்ள அனைத்தையும் 

                                     அழகானதாய் இனிமையானதாய் உணர்கிறேன் .......!

               எதனால்.......?   ஓ ..... !  இதுதான் காதலா ........!


-சூர்ய நிலா 


Tuesday, 2 December 2014

ஹைக்கூ ...



                    நீ ....,

                            என் அருகில் இல்லாத போதும் ...

                                    என்னால் உணர முடிகிறது ,

                            என் சுவாசத்தில் கலந்துவிட்ட ...

                                     உன் மனதின் ஓசைகளை .......!

- சூர்ய நிலா 


வலி



                       இன்று .....,

                                   என் குரலிலும் பிரதிபலிக்கிறது,

                                             நீ மறுத்து சென்ற என் காதலின் வலி .......!

- சூர்ய நிலா 


Monday, 1 December 2014

ஹைக்கூ ....!




நீ சென்ற பின்னும் 

உன் சுவாசத்தின் வாசம் .....

என் சுவாசத்தில்.......!

- சூர்ய நிலா


நினைவுகள்



உன்னை பார்த்த முதல் நொடி ,

நான் என் மனதை இழந்தேன்  ...

நீ என்னை பார்த்த முதல் பார்வையில் ,

நான் என்னை இழந்தேன்...

நாம் இருவரும் சந்தித்த நொடிகளில் ,

நாம் நம்மை இழந்தோம் ...

இன்று ஏதேதோ காரணங்கள் சொல்லி நீ ,

நம் காதலை இழக்க துணிந்தாய் .

நான் நம் காதலுக்காக இன்று, 

என்னையே இழக்க துணிந்தேன் .

இழப்பின் மறு பெயர் தான் காதலா...?

இல்லை நிச்சயமாக இல்லை ...

ஒவ்வொரு இழப்பின் பின்னும் இருக்கும் ,

நினைவுகள் வெறும் காலடிச்சுவ்டுகள் இல்லை....,

காலச்சுவடுகள்.........!



- ராஜ் 


Sunday, 24 November 2013

அப்பா


முகம் மறைத்த்து மண்ணுள் இருந்து மேலிருக்கும் பூவை,

தாங்கி அதற்கு வர்ணமும் வாசமும் தரும் வேர் போல 

என் சரிவுகளில் என்னை தாங்கும் தோழனாய் ,

என் தவறுகளை திருத்தும் குருவாய் ,

நல் வ்ழி நடத்தும் தலைவனாய்,

என் மேல் எனக்கு இல்லாத நம்பிக்கையை என் மேல் வைத்து ,

என் நலமே தன் நலமாக கருதும் ஒரே உறவு  - அப்பா 


இந்த மூன்றெழுத்தில் உள்ள பாதுகாப்பும் பாசமும் அளவிடமுடியாதது........!


- ராஜ் 


Thursday, 19 September 2013

நட்பு



நிலவை நேசி அது மறையும் வரை,

கனவை நேசி அது களையும் வரை,

இரவை நேசி அது விடியும் வரை ,

மலரை நேசி அது உதிரும் வரை,

நட்பை நேசி உன் உயிர் உள்ள வரை.....!


-ஸ்வேதா முத்துவேல்


Monday, 2 September 2013

Friend Ship


We met on online, had a good time,
chatted again,
and became  good friends,
Time went on, and we're still here,
and I truly believe,
You're someone dear.....!
Here is something I would like to share with you,
for all your friendship and kindness too,
It's symbol of the friendship we share together,
a friendship I hope will last forever,
And although we live so far apart...
Always remember you hold a piece of my Heart.........


-Swetha Muthuvel






வாழ்க்கை


காற்றை ரசித்துப்பார்,
             அதில் உள்ள தூய்மை புரியும்,
நிலவை ரசித்துப்பார்,
            அதில் உள்ள அழகு புரியும்,
தேனை சுவைத்துப்பார் ,
            அதில் உள்ள இனிமை புரியும்,
தோல்வியை ரசித்து
ப்பார்,
           அதில் உள்ள வெற்றி புரியும்,
வாழ்க்கையை ரசித்துப்பார்,
           அனைத்தும் புரியும்..........!

                                                                                 -ஸ்வேதா முத்துவேல்


Wednesday, 14 November 2012


காதலுக்காக எதையும் இழப்பேனென்றேன்
அவள் இழக்க சொன்னது காதலை...!
அதையும் இழக்கிறேன்.....,
என் காதலிக்காக அல்ல
என் காதலுக்காக......!
-ராஜ்



Tuesday, 13 November 2012


சொல்ல வார்த்தையும் இல்லை

பிரிய மனமும் இல்லை

இருந்து விடுகிறேன் உன்னோடு

நீ இருப்பது.....,

                கல்லறை என்றாலும் கூட.....!

- Jayanthi.S