Monday, 15 December 2014
நீ.....
நான் உன்னை சிலிர்க்க செய்யும் ...,
தென்றல் காற்றாய் மாற நினைத்தேன் ..!
ஆனால் , நீயோ....!
என் சுவசக்காற்றாய் மாறிவிட்டாய் ...!
- சூர்ய நிலா
Wednesday, 3 December 2014
காதல்
என் கண்களுக்குள்ளும் ...,
உன் முகம் ....!
உன் முகத்தில் தெரியும் அத்தனை ...
உணர்வுகளையும், என்னால் எப்படி ,
இத்தனை தெளிவாக காணமுடிகிறது
அத்தனை காதலா உன் மீது .......?
- சூர்ய நிலா
இதுதான் காதலா ........!
உன்னை பார்த்தது முதல் ,
என் கண்களும் சிரிக்க கற்றுக் கொண்டன...
என் இதயத் துடிப்பைக் கூட சங்கீதமாய் உணர்கிறேன் ...
இதற்கு முன் எப்போதும்,
இப்படி நினைத்ததில்லை....
முதல் முறை புதிதாய் உணர்கிறேன் .,
முதன் முதலாய் ....,
என்னை சுற்றி உள்ள அனைத்தையும்
அழகானதாய் இனிமையானதாய் உணர்கிறேன் .......!
எதனால்.......? ஓ ..... ! இதுதான் காதலா ........!
-சூர்ய நிலா
Tuesday, 2 December 2014
ஹைக்கூ ...
நீ ....,
என் அருகில் இல்லாத போதும் ...
என்னால் உணர முடிகிறது ,
என் சுவாசத்தில் கலந்துவிட்ட ...
உன் மனதின் ஓசைகளை .......!
- சூர்ய நிலா
வலி
இன்று .....,
என் குரலிலும் பிரதிபலிக்கிறது,
நீ மறுத்து சென்ற என் காதலின் வலி .......!
- சூர்ய நிலா
Monday, 1 December 2014
நினைவுகள்
உன்னை பார்த்த முதல் நொடி ,
நான் என் மனதை இழந்தேன் ...
நீ என்னை பார்த்த முதல் பார்வையில் ,
நான் என்னை இழந்தேன்...
நாம் இருவரும் சந்தித்த நொடிகளில் ,
நாம் நம்மை இழந்தோம் ...
இன்று ஏதேதோ காரணங்கள் சொல்லி நீ ,
நம் காதலை இழக்க துணிந்தாய் .
நான் நம் காதலுக்காக இன்று,
என்னையே இழக்க துணிந்தேன் .
இழப்பின் மறு பெயர் தான் காதலா...?
இல்லை நிச்சயமாக இல்லை ...
ஒவ்வொரு இழப்பின் பின்னும் இருக்கும் ,
நினைவுகள் வெறும் காலடிச்சுவ்டுகள் இல்லை....,
காலச்சுவடுகள்.........!
- ராஜ்
Subscribe to:
Posts (Atom)