Blogroll

Thursday, 24 January 2013

மசால் வடை

தேவையான பொருட்கள் :

கடலை பருப்பு - 1 ௧ப்
இஞ்சி -  1
பூண்டு - 2
மிளகாய் வத்தல் - 1
சோம்பு - 2 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1 
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி தலை - 1/4கப்  
கறிவேப்பிள்ளை - கொத்து
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு



செய்முறை

கடலை பருப்பை 2 மணி நேரம் ஊறவைக்கவும்.

மிக்ஸியில் மிளகாய் வத்தல், இஞ்சி, பூண்டு, சோம்பு(1 ஸ்பூன் ), உப்பு  ஊறவைத்த கடலை பருப்பு சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, கறிவேப்பிள்ளை, சோம்பு(1 ஸ்பூன் ),   அனைத்தையும் அரைத்து வைத்த கலவையுடன் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிய உருண்டைகளாக எடுத்து தட்டி எண்ணையில் போட்டு பொறித்து எடுக்கவும்.

சுவையான மசால் வடை   தயார்.




Related Article:

No comments:

Post a Comment

கருத்துக்களை வரவேற்கிறோம்............!