Blogroll

Sunday, 14 October 2012

டபுள் டக்கர் ரோல் சப்பாத்தி

தேவையான பொருட்கள்
காரட் – 2
பச்சை மிளகாய் –3
பச்சை பட்டாணி – 1 கப்
உருளை கிழங்கு – 2
                        கோதுமை மாவு – 3 கப்
உப்பு – தேவையான அளவு
தயிர் –  1 ஸ்பூன்
கடுகு – தாளிக்க
உளுந்து - தாளிக்க

முதலாவது ஸ்டப்:

கேரட்டை பொடியாக துருவி கொள்ளவும். பச்சை மிளகாயைபொடியாக நறுக்கி கொள்ளவும்.கடாயில் எண்ணை ஊற்றி கடுகு , உளுத்துதாளித்து பாதி பச்சை மிளகாய் , காரட் ,உப்பு சேர்த்து  வதக்கி தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

                    இரண்டாவது ஸ்டப் :
                  பச்சை பட்டாணி, உருளை கிழங்கு, உப்பு சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.மிக்ஸ்யில் இதை ஒரு சுற்று அரைத்து கொள்ளவும்.கடாயில் எண்ணை ஊற்றி கடுகு , உளுத்து தாளித்து பச்சை மிளகாய் , பச்சை பட்டாணி, உருளை கிழங்கு கலவை,உப்பு சேர்த்து வதக்கி கொள்ளவும்.

சப்பாத்தி:
                கோதுமை மாவுடன், உப்பு , தயிர் சேர்த்து பிசைந்து ஒரு மணி நேரம் ஊற  வைக்கவும். பின்பு சப்பாத்தி செய்து கொள்ளவும்.

செய்முறை:
                முதல் சப்பாத்தி மீது  முதலாவது ஸ்டப்பை தடவி , அதன் மீது  இரண்டாவது சப்பாத்தியை வைக்கவும்.இதன் மீது இரண்டாவது ஸ்டப்பை தடவி கொள்ளவும்.பின்பு அதன் மீது மூன்றாவது சப்பாத்தியை வைக்கவும்.இந்த மூன்றையும் சேர்த்து ரோலாக உருட்டி கொள்ளவும்.டபுள் டக்கர் ரோல் சப்பாத்தி ரெடி .

-LKS


Related Article:

No comments:

Post a Comment

கருத்துக்களை வரவேற்கிறோம்............!