Thursday, 15 November 2012
Wednesday, 14 November 2012
Tuesday, 13 November 2012
Friday, 9 November 2012
Wednesday, 24 October 2012
Sunday, 21 October 2012
தேடலைப் பதிய.....
ஒவ்வொரு நாளும் தேடலுக்கான சொற்களை டைப் செய்திடாமல், தேடல் சொற்களைப் பதிவு செய்து அவற்றை மீண்டும் பெற்று கிளிக் செய்து தேடும் வசதி விண்டோஸ் 7ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ளது.இதற்கு முதலில் விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறந்து அதன் வலது பக்கத்தில் ஒரு கட்டம் இருக்கும் அதில் நாம் தேட விரும்பும் வகைக்கான சொல்லை (ex:jpeg) டைப் செய்யவேண்டும். அந்த சொல்லுக்கான தகவல் கிடைத்தவுடன் Save Search பட்டனை கிளிக் செய்யவேண்டும்.(இது விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் விண்டோவின் இடது பக்கம் இருக்கும்.)இப்போது இன்னொரு விண்டோ காட்டப்படும். இதில் நாம் சேவ் செய்ய விரும்பும் தேடலுக்கு ஒரு பெயர் கொடுத்து பின் சேவ் பட்டன் கிளிக் செய்யவும்.இதனை எப்போது வேண்டுமானாலும் கிளிக் செய்து நமது தேடலை மேற்கொள்ளலாம்.
Friday, 19 October 2012
விழித்துக்கொண்டே என்னை கனவு காண வைத்தவளே
என் கனவெல்லாம் நிஜமாகும் நாள் எந்நாளோ....!
திங்களின் குளுமையிலும் தென்றலின் வருடலிலும்
உன் ஸ்பரிசத்தின் இருக்கத்தில் நான் இருக்கும் நாள் எந்நாளோ....!
நிழலில் கற்பனையில் இருந்து என் கவிதைகளில் வாழும் நீ
நினைவில் என் மனதில் அமர்ந்து என்னுடன் வாழும் நாள் எந்நாளோ....!
-ராஜ்
காதல்
காதலே ......!
உன் வசத்தில் நான் இல்லை என்று
என்னால் மறுக்க முடியவில்லை
இருந்தாலும் ஒரு பயம்....!
சிக்கிய பிறகு உன்னை விட்டு வர முடியாது என்று.....,
ஒப்புக்கொள்ள மறுக்கிறேன்.....!
இருந்தாலும்,
உனக்காக ஏங்குகிறேன்.......!
உன்னை விட்டு செல்ல மனம் இல்லாமல்.
-JS
Thursday, 18 October 2012
டாஸ்க் பார் ஹாட் கீ ’s
டாஸ்க்பாரில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட அப்ளிகேசனில் இயங்கும் பைல்கள் மொத்தமாக இருப்பின் அதன் மீது கர்சரைக் கொண்டு சென்று கண்ட்ரோல்+கிளிக் செய்தால் அந்த குரூப்பில் உள்ள பைல்கள் வரிசையாக காட்டப்படும்.
டாஸ்க்பாரில் உள்ள ஐட்டம் ஒன்றில் கண்ட்ரோல்+ஷிப்ட்+கிளிக் செய்தால் அந்த புரோகிராம் அட்மினிஸ்ட்ரேட்டர் திறப்பது போலத் திறக்கப்படும். இதே போல டாஸ்க்பார் ஐட்டம் ஒன்றில் ஷிப்ட்+கிளிக் செய்தால் அதற்கான புரோகிராம் இயக்கத்தை இன்னொரு விண்டோவில் திறக்கும்.
டாஸ்க்பார் ஐட்டம் ஒன்றில் ஷிப்ட்+ரைட்கிளிக் செய்தால் அந்த புரோகிராமிற்கான விண்டோ மெனு காட்டப்படும்.
Sunday, 14 October 2012
Wednesday, 10 October 2012
ஐகான்களை வரிசைபடுத்த
டாஸ்க் பாரில் உள்ள புரோகிராம் ஐகான்களை நாம் விரும்பும் வகையில் வரிசை படுத்திக்கொள்ளலாம் அதற்கு ஐகான் மீது ரைட் கிளிக் செய்து இழுத்து வந்து விரும்பும் இடத்தில் விட்டுவிட்டால் போதும். முதல் ஐந்து ஐகான்களின் புரோகிராமினை இயக்க விண்டோஸ் கீயுடன் அது அமைந்துள்ள வரிசை எண்ணை அழுத்தினால் போதும். எடுத்துக்காட்டாக வேர்ட் புரோகிராம் ஐகான் முதலாவதாக இருந்தால் அதனை இயக்க விண்டோஸ் கீயுடன் 1 என்ற எண்ணை அழுத்தினால் போதும் வேர்ட் ப்ரோகிராம் இயக்கத்திற்கு வந்துவிடும்.
விண்டோஸ் ஸ்ட்க்கி நோட்ஸ்
சின்ன சின்ன விசயங்களை நாம அடிக்கடி மறந்துடுவோம். மறக்காம இருக்க அதை தாள்ல குறிச்சு வைப்போம் அப்படி இல்லேன்னா காலண்டர்ல குறிப்பிட்ட தேதி கிட்ட கிறுக்கி வைப்போம். பாதி நேரங்கள்ல அது என்ன குறிப்புன்னே நமக்கு தெரியாது. சில சமயம் எங்க குறிச்சு வச்சோம்ன்னே மறந்துடுவோம். இதை தவிர்க்க நாம தினசரி பயன்படுத்துற கம்ப்யூட்டர் திரையிலேயே குறிச்சு வைக்க கூடியவசதிய விண்டோஸ் 7 ஸ்டிக்கி நோட்ட்ஸ் மூலமா நமக்கு தருது. இது ஏழு கலர்ல இருக்கு. இதுல நமக்கு தேவையான வகைல குறிப்புகளை வரிசை படுத்தி வச்சுக்கலாம். இத Search Box ல StikyNot.exe என டைப் பண்ணி பெறலாம் அல்லது Start -> All Programs -> Accessories -> Sticky Notes எனச் சென்று பெறலாம்.
டாஸ்க் பார் மெனு
டாஸ்க் பாரில் உள்ள புரோகிராம்களை முழுமையாகப் பார்த்து செயல்பட,விண்டோஸ் கீயுடன் T கீயை அழுத்தவும். இப்போது திரையில் டாஸ்க் பார் மெனு காட்டப்பட்டு அதில் உள்ள புரோகிராம்களின் பட்டியல் கிடைக்கும். இதில் நமக்கு தேவையான புரோகிராமினை ஆரோ கீ முலம் தேர்ந்தெடுத்து, என்டர் அல்லது கிளிக் செய்வதன் முலம் அதனை செயல்பாட்டிற்கு கொண்டுவரலாம். இதில் இருந்து வெளியேற எஸ்கேப் கீயை அழுத்தவேண்டும்.
டிஸ்பிளே செட்டிங்ஸ் மாற்ற
மானிட்டரின் காட்சித் தோற்றத்தினை சரி செய்து, அதில் காட்டப்படும் படங்கள் மற்றும் டெக்ஸ்ட் துல்லிதமாகத் தெரிய, மானிட்டரை அட்ஜஸ்ட் செய்திடாமல், நேரடியாக சில பைல்களை இயக்கி சரி செய்திட விண்டோஸ் 7 இரண்டு ஆப்லெட் புரோகிராம்கள் தந்துள்ளது அவை Clear Type Text Tuning and Display Color Calibration. இவற்றை ரன் கட்டத்தில் cttune.exe and dccw.exe என டைப் செய்து இயக்கலாம்.
Tuesday, 9 October 2012
டபுள் விண்டோஸ்
ஒரு புரோகிராமை திறந்து இயக்கிக் கொண்டிருக்கும் போது சில நேரங்களில் அதே புரோகிராமின் இன்னொரு வகை செயல்பாட்டினை மேற்கொள்ளவேண்டி இருக்கும், அப்போது அதனை இயக்க விண்டோவில் ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு டாஸ்க் பாரில் உள்ள புரோகிராம் ஐகானில் கிளிக் செய்யவேண்டும்.மேலும் இதனை மவுஸின் நடு பட்டனை அழுத்தியும் செய்யலாம்.
பின் அப் போல்டர்
ஒரு குறிப்பிட்ட போல்டரிலிருந்து பைல்கலை அடிக்கடி எடுத்தோ அல்லது தினமும் பயன்படுத்தும் போது ஒவ்வொரு முறையும் விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் சென்று திறக்க வேண்டியதில்லை.அதற்கு பதிலாக குறிப்பிட்ட போல்டரை, டாஸ்க் பாரில் பின் அப் செய்து வைத்துக் கொள்ளலாம். அதற்கு அந்த போல்டரில் ரைட் கிளிக் செய்து, இழுத்து டாஸ்க் பாரில் விட்டுவிடவும். விண்டோஸ் 7 தானாக அதனை எக்ஸ்ப்ளோரர் ஜம்ப் லிஸ்டில் வைத்துக் கொள்ளும்.போல்டரை திறக்க டாஸ்க் பாரில் உள்ள ஐகானில் கிளிக் செய்தால் போதும்.
Monday, 8 October 2012
Friday, 5 October 2012
விண்டோஸ் 7
விண்டோஸ் 7 ஒரு பார்வை
இதுவரை விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இல்லாத சில புதிய வசதிகளை விண்டோஸ் கொண்டுவந்துள்ளது. அவற்றில் சிலவற்றை பற்றி இங்கு பார்ப்போம்.
Saturday, 29 September 2012
Thursday, 27 September 2012
Wednesday, 26 September 2012
Tuesday, 25 September 2012
அம்மா
ஊருக்கு உதவாக்கரை என்றாலும்
உனக்கு நான் உத்தமன்
உன் பேச்சை கேட்காத பிள்ளை என்றாலும்
உன் பாசத்திற்குரிய பிள்ளை
நீ சமைத்த உணவை குறை கூறிய எனக்கு
இன்று பத்து மணி நேரத்திற்கு மேலாக உணவு ருசி அறியாமல் இருக்கிறது
ஏதேதோ கடைகளில் உண்ணும் போது கலங்குகிறது என் கண்கள்
அதை பார்க்கும் கண்களுக்கு என் நாக்கு தரும் பதில் ‘காரம்’
உன் அருகில் இருந்த நாட்களில் உன் உயரம் தெரியவில்லை
இன்று உன்னை விட்டு பல மையில் பிரிந்து இருக்கும் போது தெரிகிறது உன் பாசம்
இதை செய்த காலத்தை என்ன செய்வது
என்னையும் உன்னையும் பிரித்து வைத்ததற்கு கோபமா.....!
இல்லை, உன் மேல் இருந்த பாசத்தை புரிய வைத்ததற்கு நன்றியா....?
கருவில் சுமந்த என்னை இன்றும் – உன்
நினைவில் சுமக்கிறாய்... சுமையாய் இல்லாமல் சுகமாய்...!
-ராஜ்
Sunday, 23 September 2012
ஆன்லைன் ஸ்டோரேஜ்
கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறை இப்ப கொஞ்ச காலமாதான் பிரபலமா இருக்கு... ஆனா பல ஆண்டு காலமாவே பைல்களை இணையதளத்தில் சேவ் செய்து வைத்திடும் வசதி இருந்து வருகிறது.அப்படிப்பட்ட தளங்களை பற்றி தான் இங்கு பார்க்கப் போகிறோம்.என்னதான் பைல்களை சிடி,டிவிடி கள்ள ஸ்டோர் பண்ணி வச்சாலும் எதிர்காலத்துல நாம அதுல உள்ள தகவல்களை இழக்க வாய்ப்புகள் அதிகம்.இத்தகைய இழப்புகளை தவிர்ப்பதற்காகவே பல இணைய தளங்கள் இலவசமாகவும்,கட்டணம் செலுத்தியும் பைல்களை சேவ் செய்யும் வசதியை தருகின்றன.இதோ அத்தகைய இணைய தளங்களில் சில,
தஞ்சை மாவட்டம்
தஞ்சை மாவட்டம்
இம் மாவட்டத்தின் பெயர்க்காரணம், புராண காலத்தில் தஞ்சன் எனும் அரக்கன் இவ்விடத்தில் மக்களைத் துன்புறுத்தி வந்தான் என்றும், மக்களைக் காக்க சிவபெருமான் அவனை வதம் செய்த இடமாதலால் தஞ்சாவூர் என்று பெயர் வந்ததாகவும் கூறுகின்றனர்.தமிழையும் தமிழர்களையும் பெருமை படுத்தக்கூடிய எண்ணற்ற சிறப்புகளை தன்னிடம் கொண்டுள்ளது இம்மாவட்டம்.
Saturday, 22 September 2012
Tuesday, 18 September 2012
மழலை
உலகின் செல்வங்கள் அனைத்தையும்,
உன் காலடியில் கொட்டிக் கொடுத்தாலும்,
உன் சிறிய புன் சிரிப்பிற்கு அது விளையாகாது.....!
உலகின் அத்தனை இன்பங்களையும்,
அனுபவித்தாலும் அது,
உன் ஒற்றைச் சொல்லுக்கு ஈடாகாது.....!
முழுமை பெறாத 'அம்மா' என்ற உன் சொல் கூட
மழலை மொழியில் வெளிப்படும் போது,
ஆயிரம் யுகம் இருந்த தவத்திற்கு கிடைத்த வரமாய் தோன்றுகிறது!
உன் ஒவ்வொரு அசைவையும் அழியாத,
எண்ணங்களின் கலவையால் - என்
நெஞ்சச் சுவர்களில் வரைந்து கொண்டிருக்கிறேன்!
உன் புன்னகைகளை என் இதயத்தில்,
பொக்கிசமாய் சேமித்துக் கொண்டிருக்கிறேன்!
எத்தனை முறை பார்த்தாலும் - நீ வெளிப்படுத்தும்
சோம்பல் கூட எனக்கு ரவிவர்மாவின்,
ஓவியமாகத்தான் தோன்றுகிறது!
என் செல்வமே நீ தூங்கும் போது என் இமைமூடாது,
ரசிப்பதும் தனி சுகமாய்த்தான் இருக்கிறது........!
பிரிவு....!
இரவின் பிடியினில் உலகமே உறங்குகிறது,
நான் மட்டும் விழித்துக் கொண்டு....
தலையணையில் முகம் புதைத்து உன் நினைவை
என் மதியில் வருகை பதிவு செய்கிறேன் உன் பிரிவால்.....!
-ராஜ்
Wednesday, 5 September 2012
மௌனம்....!
வாய் மூடாமல் பேசுகிறவன் இன்று
கண்களால் பேசுகிறேன் உன்னுடன் - என்
விழி உன்னை பார்க்கும் ஒவ்வொரு நொடியிலும்
மௌன - (ம) - ஆகிறது என் தாய்மொழி
- ராஜ்
Tuesday, 4 September 2012
கம்ப்யூட்டர் விரைவாக ஷட் டவுண் ஆக.....
கணினி பயன் படுத்துவதே வேலை நேரத்தை குறைப்பதற்காகத் தான். கணினியிலும் விரைவாக வேலை செய்ய இதோ
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் என்ற உடனே எல்லார்க்கும் முதல்ல நினைவுக்கு வர்றது பூட்டு 2வது பிரியாணி. திண்டுக்கல் மாவட்டம் 1985ம்
Monday, 3 September 2012
Saturday, 1 September 2012
கவிதை
என் கண்கள் பார்க்கும்,
திசையெல்லாம் நீ தான்......
என் பயணமும் நீ தான்,
என் பாதையும் நீ தான்,
நீ நடக்கும் பாதையில் நான் இருப்பேன்,
"உன் கால் தடமாக......!"
- SS
தமிழகத்தின் மாவட்டங்களும் அதன் சிறப்புகளும்......!
தமிழகத்தின் மாவட்டங்கள் பற்றியும் அதன் சிறப்புகள் பற்றியும் கூற இருக்கிறேன்......(எனக்கு தெரிந்த வரையில்) முதலில் கூறப்போவது மதுரை மாவட்டத்தைப் பற்றி......!
மதுரை மாவட்டம்
தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரம் மதுரை. உலகின் மிகத்தொன்மையான நகரங்களில் ஒன்று.(2000ஆண்டுகளுக்கு மேல் தொன்மை வாய்ந்தது).தென்னிந்திய திருத்தலங்களின் நுழைவு வாயிலாகக் கருதப்படுவது இதன் சிறப்பு..... மேலும் மல்லிகை பூ, கோவில்கள்,சித்திரைத் திருவிழா,தெப்பத் திருவிழா, போன்ற எண்ணற்ற சிறப்புகளும் உண்டு.மதுரைக்கு தூங்காநகரம்,ஆலவாய்,கோவில் நகரம், நான்மாடக்கூடல் என்கின்ற சிறப்பு பெயர்களும் உண்டு.முருகக் கடவுளின் அறுபடை வீடுகளில் இரண்டு மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Thursday, 30 August 2012
ஆசை
விடிந்தும் உன் கூந்தல் தரும்,
இருளில் துயில ஆசை!
கண்விழிக்கும் நேரத்தில் உன் விழி
என்னைப் பார்க்க ஆசை!
உணவு அருந்தும் போது உன் விரல் ருசி
என் ‘நா’ அறிய ஆசை!
மாலை நேரத்தில் உன் விரல் கோர்த்து
வீதியில் வலம் வர ஆசை!
மழை விழும் போது நீ என் இரு கரங்களின்
அணைப்பில் இருக்க ஆசை!
உன் தூக்கத்தின் கனவை நான்
கண் விழித்து ரசிக்க ஆசை!
உன் விழி நீர் பார்க்கும் முன்னே
என் உயிர் பிரிய ஆசை! - அந்த பிரிவும் ,
உன் மடியில் இருக்க ஆசை!
- ராஜ்
Subscribe to:
Posts (Atom)