Blogroll

Thursday, 29 January 2015

காதலை சுமக்கும் மனமும் ,

கர்பத்தை சுமக்கும் பெண்ணும் ஒன்று ...

அந்த ஓர் உயிர்கள் ஈருயிரக பிரியும் ,

வலியில் மட்டுமே வேறுபடுகிறது ...

ஒன்று இன்பமான வலி .., மற்றொன்று மரண வலி.....!

-ராஜ் 


என் கன்னத்தில் இருக்கும் உன் 

நெற்றி குங்குமம் அழகு ...

என் சட்டை பட்டனில் ஒட்டியிருக்கும் உன் 

கூந்தல் முடி அழகு ...

என் மார்பில் உன் காதணி 

பதித்த தடம் அழகு ...

என் விடியலின் அழகையும் மிஞ்சுகிறது 

உன் மொத்த அழகு ...!

- ராஜ் 


          மேகமில்லாமல் மழை பொழிகிறது...,

               மங்கை அவள் நினைவால் ....!

          கோடையும் குளிர்கிறது ...,

               கோதை அவள் பார்வையால் ...!

          கானல் நீரும் கடலாய் தெரிகிறது ...,

               கன்னி அவள் கைகோர்த்து நடந்தால்...!

          காகம் கரைவதும் கண்ணன் கீதமாய் கேட்கிறது ...,

               காரிகை அவள் இதழ் அசைந்தால் ...!

          மொத்தத்தில் வானத்தின் வண்ணத்தை பிரதிபலிக்கும் கடலாய் ...,

     என்னவளின் எண்ணங்களை பிரதிபலிக்கும் கண்ணாடி ஆகிறேன் நான் ......!

- ராஜ் 


Wednesday, 28 January 2015


இமைப்பதை மறுக்கிறது என் இமைகள் ..,

மனதிலோ ஒரு வித பரபரப்பு அதிகரிக்கிறது ...,

சுவாசத்தின் சதவிகிதமோ சராசரியை மிஞ்சுகிறது ....,

ஐந்தரை அடி உயரமும் அர்த்தமற்று நிற்கிறது .....,

உன்னை சந்தித்தவேளையில்.........!

-ராஜ் 



பார்வை ஆயிரம் எண்ணங்களை சொல்ல ..,

வார்த்தைகளை மறந்து வாய்மொழி மௌனமாக ...

சேருமிடம் மறந்து கால்கள் நதியென நடக்க ..,

உடல் மட்டும் ஓரிடம் இருக்க ..,

உயிர் ஓர் உறைவிடம் தேடுகிறது ....

அது உன் நினைவாக இருக்க ஏங்குகிறது .....!

-ராஜ் 


Tuesday, 27 January 2015



சுற்றி நான்கு சுவர்களுக்குள் இருக்கும் ...

தனிமை துன்பத்திலும் ஓர் இன்பம் ..,

என் நினைவுகளில் உன் நினைவு வரும்போது ...!

நீர் துளி பட்ட பறவை போல் ...

சிலிர்கிறது இதயம் ..,

என் நினைவுகளில் உன் நினைவு வரும்போது ...!

-ராஜ் 


காதலா....? கோபமா....?


பருவம் உணர்த்தாத காதலை உன் பார்வை உணர்த்தியது..,

     உன் பார்வை பட்ட இடமெல்லாம் உன் ஸ்பரிசத்தை உணர்த்தியது...,

          உன்னை சந்திக்கும் போதெல்லாம் சலனமற்ற மனது 

ஆர்ப்பரிக்கும் கடலாய் மாறுகிறது...!

      அலையாய் வருபவனை ஒவ்வொரு முறையும் 

            அமைதியாக .., திரும்ப வைக்கிறது உன் பார்வை ....!

என் வார்த்தைகளை மௌனமாக்கும் அந்த பார்வையின் அர்த்தம் 


                                        காதலா....? கோபமா....?

- ராஜ்