ஒவ்வொரு நாளும் தேடலுக்கான சொற்களை டைப் செய்திடாமல், தேடல் சொற்களைப் பதிவு செய்து அவற்றை மீண்டும் பெற்று கிளிக் செய்து தேடும் வசதி விண்டோஸ் 7ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ளது.இதற்கு முதலில் விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறந்து அதன் வலது பக்கத்தில் ஒரு கட்டம் இருக்கும் அதில் நாம் தேட விரும்பும் வகைக்கான சொல்லை (ex:jpeg) டைப் செய்யவேண்டும். அந்த சொல்லுக்கான தகவல் கிடைத்தவுடன் Save Search பட்டனை கிளிக் செய்யவேண்டும்.(இது விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் விண்டோவின் இடது பக்கம் இருக்கும்.)இப்போது இன்னொரு விண்டோ காட்டப்படும். இதில் நாம் சேவ் செய்ய விரும்பும் தேடலுக்கு ஒரு பெயர் கொடுத்து பின் சேவ் பட்டன் கிளிக் செய்யவும்.இதனை எப்போது வேண்டுமானாலும் கிளிக் செய்து நமது தேடலை மேற்கொள்ளலாம்.
Related Article:
No comments:
Post a Comment
கருத்துக்களை வரவேற்கிறோம்............!