Blogroll

Sunday, 21 October 2012

Pencil Art




தேடலைப் பதிய.....

                                     ஒவ்வொரு நாளும் தேடலுக்கான சொற்களை டைப் செய்திடாமல், தேடல் சொற்களைப் பதிவு செய்து அவற்றை மீண்டும் பெற்று கிளிக் செய்து தேடும் வசதி விண்டோஸ் 7ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ளது.இதற்கு முதலில் விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறந்து அதன் வலது பக்கத்தில் ஒரு கட்டம் இருக்கும் அதில் நாம் தேட விரும்பும் வகைக்கான சொல்லை (ex:jpeg) டைப் செய்யவேண்டும். அந்த சொல்லுக்கான தகவல் கிடைத்தவுடன் Save Search பட்டனை கிளிக் செய்யவேண்டும்.(இது விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் விண்டோவின் இடது பக்கம் இருக்கும்.)இப்போது இன்னொரு விண்டோ காட்டப்படும். இதில் நாம் சேவ் செய்ய விரும்பும் தேடலுக்கு ஒரு பெயர் கொடுத்து பின் சேவ் பட்டன் கிளிக் செய்யவும்.இதனை எப்போது வேண்டுமானாலும் கிளிக் செய்து நமது தேடலை மேற்கொள்ளலாம்.


Friday, 19 October 2012

விழித்துக்கொண்டே என்னை கனவு காண வைத்தவளே  
 என் கனவெல்லாம் நிஜமாகும் நாள் எந்நாளோ....!
திங்களின் குளுமையிலும் தென்றலின் வருடலிலும்
உன் ஸ்பரிசத்தின் இருக்கத்தில் நான் இருக்கும் நாள் எந்நாளோ....!
 நிழலில் கற்பனையில் இருந்து என் கவிதைகளில் வாழும் நீ  
 நினைவில் என் மனதில் அமர்ந்து என்னுடன் வாழும் நாள் எந்நாளோ....!

-ராஜ்


காதல்

காதலே ......!
உன் வசத்தில் நான் இல்லை என்று
              என்னால் மறுக்க முடியவில்லை
இருந்தாலும் ஒரு பயம்....!
சிக்கிய பிறகு உன்னை விட்டு வர முடியாது என்று.....,
ஒப்புக்கொள்ள மறுக்கிறேன்.....!
இருந்தாலும்,
உனக்காக ஏங்குகிறேன்.......!
உன்னை விட்டு செல்ல மனம் இல்லாமல்.

-JS