Blogroll

Wednesday, 18 December 2013

முட்டை மாசலா

தேவையான பொருட்கள் 

முட்டை - 2
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு, உளுந்து - 1 ஸ்பூன்
கறிவேப்பிள்ளை - 1 கொத்து

செய்முறை 

  •  பெரிய வெங்காயம் , தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பில்லை தாளிக்கவும்.
  • பின் வெங்காயத்தை வதக்கவும், நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • பின் உப்பு , மஞ்சள் தூள்,மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து வதக்கவும். மசாலா வாடை போனதும் சிறிது தண்ணீர் தெளித்து பிரட்டி விடவும்.
  • கிரேவி பதத்திற்கு வந்ததும் முட்டையை உடைத்து ஊற்றவும். இதனுடன் மிளகு தூளையும் சேர்த்து உதிரியாக வரும் வரை நன்கு கிண்டவும்.  
  • இது சாதம் மற்றும் சப்பாத்திக்கு நன்றாக இருக்கும். குழந்தைகளுக்கு இதை சப்பாத்தியில் வைத்து ரோல் செய்து கொடுக்கலாம்.



குறிப்பு: கொத்தமல்லி தலை விரும்புபவர்கள் இறக்குவதற்கு முன் மல்லி தலை சேர்த்து கொள்ளவும்.( ஒருமுறை நன்கு கிளறி பின் இறக்கவும். )





















Related Article:

No comments:

Post a Comment

கருத்துக்களை வரவேற்கிறோம்............!