Blogroll

Tuesday, 17 December 2013

இட்லி பொடி

தேவையான பொருட்கள் 

காய்ந்த மிளகாய்  - 2 கப்
உளுந்தம் பருப்பு  - 1 கப்
அரிசி  -  1/4 கப்
கடலை பருப்பு  -  1/4 கப்
பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
பூண்டு - 10 பல்
உப்பு - 2 ஸ்பூன் (பெரிய ஸ்பூன்)
எண்ணெய் - சிறிது


செய்முறை 

  • தேவையான பொருட்கள் அனைத்தையும் சிறிது எண்ணெய்(1/4 ஸ்பூன் அளவு) ஊற்றி தனித் தனியாக வறுத்து வைக்கவும்.
  • பெருங்காயத்தை உளுந்தம் பருப்புடன் கடைசியாக சேர்த்து வறுத்து கொள்ளவும்.
  • நன்கு ஆறியதும் மிக்ஸியில் ஒவ்வொன்றாக போட்டு நன்கு பொடித்து கொள்ளவும்.
  • தனித் தனியாக பொட்டித்தவற்றை ஒரு அகலமான பாத்திரத்தில் ஒன்றாக கொட்டி நன்கு கலந்து மீண்டும் ஒருமுறை மிக்ஸ்சியில் போட்டு பொடிக்கவும்.
  • சுவையான இட்லி பொடி தயார்.




குறிப்பு : காரத்திற்கு ஏற்ப மிளகாயின் அளவை அதிகப்படுத்தி கொள்ளலாம்.
உப்பு மற்றும் பூண்டை ஏதாவது ஒரு பொருள் அரைத்து முடிக்கும் போது கடைசியாக   சேர்த்து அரைத்து கொள்ளலாம். (இவற்றை தனியாக அரைத்தால் மிக்ஸியில் ஓட்டிக்கொள்ளும்.) 




















Related Article:

No comments:

Post a Comment

கருத்துக்களை வரவேற்கிறோம்............!