தேவையான பொருட்கள்
இட்லி அரிசி - 1 கப்
உருட்டு உளுந்தம் பருப்பு - 1/4 கப்
தொளி உளுந்தம் பருப்பு - 2 ஸ்பூன்
வெந்தயம் - 4 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
- இட்லி அரிசி,உளுந்தம் பருப்பு,வெந்தயம் அனைத்தையும் 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
- பின் நன்றாக கழுவி உப்பு சேர்த்து அரைத்து வைக்கவும் .(குறைந்தது 10 மணி நேரம் கழித்து தோசையாக ஊற்றலாம்.)
- தோசை கல்லில் சிறிது தடிமானாக ஊற்றி சுற்றி நல்லெண்ணை விட்டு வெந்ததும் திருப்பி போட்டு பின் எடுத்து பரிமாறவும்.
- வெந்தய தோசைக்கு மிளகாய் சட்டினி சுவையாக இருக்கும்.
குறிப்பு: தொளி உளுந்தம் பருப்பில் அதன் தொளியை நீக்காமல் அரைக்க வேண்டும். இவ்வாறு அரைக்கும் போது சுவை கூடுதலாக இருக்கும். தொளி உளுந்தம் பருப்பு சேர்க்காமலும் அரைக்கலாம்.
Related Article:
No comments:
Post a Comment
கருத்துக்களை வரவேற்கிறோம்............!