Blogroll

Sunday, 23 September 2012

ஆன்லைன் ஸ்டோரேஜ்

           கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறை இப்ப கொஞ்ச காலமாதான் பிரபலமா இருக்கு... ஆனா பல ஆண்டு காலமாவே பைல்களை  இணையதளத்தில் சேவ் செய்து வைத்திடும் வசதி இருந்து வருகிறது.அப்படிப்பட்ட தளங்களை பற்றி தான் இங்கு பார்க்கப் போகிறோம்.என்னதான் பைல்களை சிடி,டிவிடி கள்ள ஸ்டோர் பண்ணி வச்சாலும் எதிர்காலத்துல நாம அதுல உள்ள தகவல்களை இழக்க வாய்ப்புகள் அதிகம்.இத்தகைய இழப்புகளை தவிர்ப்பதற்காகவே பல இணைய தளங்கள் இலவசமாகவும்,கட்டணம் செலுத்தியும் பைல்களை சேவ் செய்யும் வசதியை தருகின்றன.இதோ அத்தகைய இணைய தளங்களில் சில,
மைக்ரோசாப்ட் ஸ்கை டிரைவ்
(Microsoft Sky Drive):
           இந்த தளம் இலவசமாக 7ஜிபி அளவு இடம் தருகிறது.இதில் போட்டோ,விடியோக்களை அதிகமாக சேவ் செய்து வைத்திட முடியும்.இதற்கென்று தனியாக எந்த பாதுகாப்பும் இல்லை. அதனால் இதில் பெர்சனல் பைல்களை சேவ் செய்து வைத்திட முடியாது. இதுவே இத்தளத்தின் குறைபாடக கருதப்படுகிறது. இத்தளத்தின் முகவரி http://windows.microsoft.com/enUS/skydrive/home.
மோஸி ஹோம் ப்ரி(Mozy Home Free):
இந்த தளம் இலவசமாக  2ஜிபி இடம் தருகிறது.இந்த தளத்தின் சிறப்பு நமது அக்கவுண்டை செட் செய்துவிட்டு போல்டர்களை தேர்ந்தெடுத்து அமைத்தால் பைல்கள் தாமாகவே ஒருங்கிணைக்கப்பட்டு சேவ் செய்யப்படும் இத்தளத்தின் முகவரி  http://mozy.com/home/free
ஐ டிரைவ்(I Drive):
இந்த தளம் 5ஜிபி வரை இலவசமாக தருகிறது.இதில் பர்சனல் கம்ப்யூட்டர் என்று இல்லாமல் எந்த சாதனத்தில் இருந்தும் பைல்களை சேவ் செய்திட முடியும்.இங்கு பைல்கள்  256-bit AES என்க்ரிப்சன் என்ற தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சேவ் செய்யப்படுகின்றன.இதற்கான கி யூசருக்கு மட்டுமே அறிவிக்கப்படும்.இதனால் இது மிகவும் பாதுகாப்பானது.இத்தளத்தின் முகவரி  http://www.idrive.com/index.html
சுகர் சிங்க்(Sugar Sync):
இந்த தளமும் இலவசமாக  5ஜிபி தருகிறது.இது அனைத்துவகை ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் செயல்படும்.இதில் பைல்களை சுருக்கி சேவ் செய்ய  TLS (SSL 3.3) என்கிற தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. அதனால் இதுவும் பாதுகாப்பானதே.இதன் முகவரி   https://www.sugarsync.com/?source=myss
ஏ டிரைவ்(A Drive):
இத்தளம்  50ஜிபி வரை இலவசமாக வழங்குகிறது.இத்தளத்தில் ஸ்டோரேஜ்,பேக் அப்,பகிர்ந்து கொள்ளல்,எடிட்டிங்,எங்கிருந்தும் பைல்களை டவுண்லோட் செய்தல் என பல வசதிகள் உள்ளது.இதன் மூலம் நமது பைல்களை மற்றவர்களுடன் பகிர்ந்துக்கொள்ள முடியும்.இதற்கு பைளுக்கான லிங்க்கை மட்டும் தேவைப்படுபவருக்கு அனுப்பினால் போதும்.இதன் முகவரி  http://www.adrive.com/
கூகுல் டிரைவ்(Google Drive):
இந்த தளம் இலவசமாக  5ஜிபி இடம் தருகிறது.இந்த தளத்திலும் பகிர்ந்துகொள்ளல்,ஆன்லைன் எடிட்டிங் போன்ற வசதிகள் உள்ளன.மேலும் எளிதாக பைல்களை தேடும் வசதியும் உள்ளது. இதன் முகவரி  https://drive.google.com/start?authuser=0#home
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தளங்களிலும் இலவச ஸ்டோரேஜ் ஐ விட அதிக அளவு தேவைப்படுகிறவர்கள் மேற்கொண்டு கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.அதற்கான கட்டண விவரங்கள் அந்தந்த தளங்களிலே தரப்பட்டுள்ளன.இவைதவிர மேலும் பலதளங்கள் உள்ளன.அவற்றின் முகவரி மற்றும் இலவச ஸ்டோரேஜ் அளவுகள்....
உபுண்டு ஒன்(Ubuntu One):
5ஜிபி முகவரி  https://ubuntu.com/
பாக்ஸ்(Box):
5ஜிபி இதில் பைல்களின் அளவு 100mbக்குள் இருக்க வேண்டும். முகவரி http://www.box.com/
 ட்ராப் பாக்ஸ்(Drop Box):
2ஜிபி முகவரி https://www.dropbox.com
கொமடா பேக் அப்(Comodo Backup):
5ஜிபி இதில் பைல்கள் Volume Shadow Copy என்கிற தொழில்நுட்ப முறையில் சேவ் செய்யப்படுகின்றன.முகவரி  http://backup.comodo.com/
மி மீடியா(Mi Media):
7ஜிபி முகவரி  http://www.mimedia.com/
மை அதர் டிரைவ்(My Other Drive):
2ஜிபி முகவரி http://www.myotherdrive.com/
படி பேக் அப்(Buddy Backup):
இந்த தளம் பைல்களை நமது கம்ப்யூட்டரிலேயே சுருக்கி பதிந்து பிறகு தளத்திற்கு எடுத்து செல்கிறது.இதில் ஒன்றுக்கு மேற்பட்ட பேக் அப் பைல்களை உருவாக்கலாம்.முகவரி http://buddybackup.com/


குறிப்பு: இந்த தகவல்கள் நாளிதழில் இருந்து சேகரிக்கப்பட்டது.







Related Article:

No comments:

Post a Comment

கருத்துக்களை வரவேற்கிறோம்............!