உலகின் செல்வங்கள் அனைத்தையும்,
உன் காலடியில் கொட்டிக் கொடுத்தாலும்,
உன் சிறிய புன் சிரிப்பிற்கு அது விளையாகாது.....!
உலகின் அத்தனை இன்பங்களையும்,
அனுபவித்தாலும் அது,
உன் ஒற்றைச் சொல்லுக்கு ஈடாகாது.....!
முழுமை பெறாத 'அம்மா' என்ற உன் சொல் கூட
மழலை மொழியில் வெளிப்படும் போது,
ஆயிரம் யுகம் இருந்த தவத்திற்கு கிடைத்த வரமாய் தோன்றுகிறது!
உன் ஒவ்வொரு அசைவையும் அழியாத,
எண்ணங்களின் கலவையால் - என்
நெஞ்சச் சுவர்களில் வரைந்து கொண்டிருக்கிறேன்!
உன் புன்னகைகளை என் இதயத்தில்,
பொக்கிசமாய் சேமித்துக் கொண்டிருக்கிறேன்!
எத்தனை முறை பார்த்தாலும் - நீ வெளிப்படுத்தும்
சோம்பல் கூட எனக்கு ரவிவர்மாவின்,
ஓவியமாகத்தான் தோன்றுகிறது!
என் செல்வமே நீ தூங்கும் போது என் இமைமூடாது,
ரசிப்பதும் தனி சுகமாய்த்தான் இருக்கிறது........!
Related Article:
No comments:
Post a Comment
கருத்துக்களை வரவேற்கிறோம்............!