ஊருக்கு உதவாக்கரை என்றாலும்
உனக்கு நான் உத்தமன்
உன் பேச்சை கேட்காத பிள்ளை என்றாலும்
உன் பாசத்திற்குரிய பிள்ளை
நீ சமைத்த உணவை குறை கூறிய எனக்கு
இன்று பத்து மணி நேரத்திற்கு மேலாக உணவு ருசி அறியாமல் இருக்கிறது
ஏதேதோ கடைகளில் உண்ணும் போது கலங்குகிறது என் கண்கள்
அதை பார்க்கும் கண்களுக்கு என் நாக்கு தரும் பதில் ‘காரம்’
உன் அருகில் இருந்த நாட்களில் உன் உயரம் தெரியவில்லை
இன்று உன்னை விட்டு பல மையில் பிரிந்து இருக்கும் போது தெரிகிறது உன் பாசம்
இதை செய்த காலத்தை என்ன செய்வது
என்னையும் உன்னையும் பிரித்து வைத்ததற்கு கோபமா.....!
இல்லை, உன் மேல் இருந்த பாசத்தை புரிய வைத்ததற்கு நன்றியா....?
கருவில் சுமந்த என்னை இன்றும் – உன்
நினைவில் சுமக்கிறாய்... சுமையாய் இல்லாமல் சுகமாய்...!
-ராஜ்
Related Article:
No comments:
Post a Comment
கருத்துக்களை வரவேற்கிறோம்............!