Blogroll

Tuesday, 4 September 2012

திண்டுக்கல் மாவட்டம்

                                              திண்டுக்கல் என்ற உடனே எல்லார்க்கும் முதல்ல நினைவுக்கு வர்றது பூட்டு 2வது பிரியாணி. திண்டுக்கல் மாவட்டம் 1985ம்
ஆண்டு மதுரை மாவட்டத்திலிருந்து உருவாக்கப்பட்டது.காரணப் பெயர் கொண்ட ஊர்களில் திண்டுக்கல்லும் ஒன்று ஊரின் நடுவே திண்டைப் போல் பெரிய மலை இருந்ததால் 'திண்டுக்கல்'என்று பெயர் வந்ததாக கூறுகின்றனர்.மன்னர்கள் காலத்தில் இதன் பெயர் திண்டீஸ்வரம்.பாண்டிய மன்னர்கள் காலத்தில் இவ்வூர் சிறந்த இராணுவத்தளமாக இருந்து பாண்டியநாட்டை அதன் பல இன்னல்கள் இடையுருகளிலிருந்து தடுத்து காப்பாற்றியது.திண்டுக்கலில் உள்ள ஹைதர் அலியால் கட்டப்பட்ட கோட்டை குறிப்பிடதக்கது.மேலும் பேரணை மற்றும் சிறுமலை மலைப்பகுதி அருமையான சுற்றுலாத்தலமாகும்.

தொழிற்சாலைகள்

                      தோல் பதப்படுத்தும் தொழிலுக்கு பெயர் பெற்றது.நூற்பாலை தொழிலில் கோவைக்கு அடுத்தபடியாக உள்ளது திண்டுக்கல்.மேலும் பூட்டு உற்பத்திக்கும் புகையிலை வர்த்தகத்திற்கும் பெயர் பெற்றது.இம் மாவட்டத்தில் உள்ள சின்னாளபட்டியில் கைத்தறி தொழில் சிறந்து விளங்குகிறது.வெங்காயம் மற்றும் நிலக்கடலை மொத்த வியாபாரத்தில் முக்கிய இடம் வகிக்கிறது.

முக்கிய இடங்கள்


மலைக்கோட்டை
                       மதுரையை ஆண்ட மன்னன் முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் இங்கு கோவில் கட்டினார்.அன்று முதல் இக்கோவில் ராஜராஜேஸ்வரி கோவில் என்றழைக்கப்பட்டது. தற்போது இந்த மலைக்கோவிலில் ஐந்து கடவுள்களுக்கான கருவறைகள் தனித்தனியாக இருந்த போதிலும் எந்தக் கருவறையிலும் சிலைகள் இல்லை.  

அபிராமி அம்மன் கோவில்
                       திண்டுக்கல்லின் மையத்தில்  அமைந்துள்ளது. ஆடி மாதம் அம்மன் பூப்பல்லாக்கில் வலம் வருவது பிரசித்தி பெற்றது.


கோட்டை மாரியம்மன் கோவில்
                         இக் கோவில் 300 ஆண்டுகள் பழமையானது. திண்டுக்கல் மாநகரின் காவல் தெய்வமாக கருதப்படுகிறது.இங்கு மாசித் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

கோபிநாத சுவாமி கோவில்
                        ரெட்டியார் சத்திரம் ரயில் நிலையத்திலிருந்து 3கி.மீ தொலைவில் உள்ளது.

சின்னாளப்பட்டி சுப்ரமணிய சுவாமி கோவில்
                         திண்டுக்கல்லில் இருந்து 10கி.மீ தொலைவில் உள்ளது.இங்கு குறிப்பிட்ட நேரத்தில் தினமும் மணம் கமழும் ஒளி ஒன்று சுவாமியை சுற்றி வருவதாக கூறுகின்றனர்.

 அணைப்பட்டி ஆஞ்சிநேயர் கோவில்
                      திண்டுக்கல்லில் இருந்து 35கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

ஒட்டன்சத்திரம்
                     திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வி வசாய முக்கியத்துவம் வாய்ந்த ஊர்.கோயம்பேடுக்கு அடுத்ததாக தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய காய்கறி சந்தை இங்கு உள்ளது.

 கொடைக்கானல்
                     திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 100கி.மீ தொலைவில் உள்ளது.மலைகளின் இளவரசி என்று அனைவராலும் புகழப்படுவது.ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கோடை விழாவும் டிசம்பரில் குளிர்கால விழாவும் சிறப்பு வாய்ந்தவை.வெள்ளி அருவி,பசுமை பள்ளத்தாக்கு,கோடை ஏரி,பில்லர் ராக்,பிரையன்ட் பூங்கா,செட்டியார் பூங்கா,கோக்கர்ஸ் வாக்,செண்பகனூர் மயூசியம்,பேரிஜம் ஏரி,பைன் பாரஸ்ட்,குக்கல் குகை,குறுஞ்சி ஆண்டவர் கோவில், போன்றவை அனைவரும் இங்கு கட்டாயம் சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள்.  

பழனி
                     திண்டுக்கல்லில் இருந்து 53கி.மீ தொலைவில் அமைத்துள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று.


                        மேலும் திருமலைக்கேணி முருகன் கோவில்,பேகம்பூர் பெரிய மசூதி,செயின்ட் ஜான்ஸ் சர்ச்,காளகஸ்தீஸ்வரர் கோவில் ஆகியவையும் திண்டுக்கல்லில் பார்க்கவேண்டிய இடங்கள்.


                                


Related Article:

No comments:

Post a Comment

கருத்துக்களை வரவேற்கிறோம்............!