தேவையான பொருட்கள்
பச்சை பட்டாணி – 1/2கப்
உருளைகிழங்கு – 4
தக்காளி – 4
பெரிய வெங்காயம் – 1
புதினா – 10 இலை
கொத்தமல்லி – 1 கப்
பச்சைமிளகாய் – 3
கறிமசாலா – 3 Spoon
கரம் மசாலா – ½ Spoon
மஞ்சள் தூள் – 1 Spoon
இஞ்சி பூண்டு விழுது – 1 Spoon
முந்திரி பருப்பு – 10
பட்டை,கிராம்பு,ஏலக்காய் – 2
எண்ணெய்,உப்பு – தேவையான அளவு
தேங்காய் – 2 சில்
செய்முறை
- பட்டாணியை முதல் நாளே ஊறவைக்கவும். ஊறவைத்த பட்டாணி,உருளைகிழிங்கு இரண்டையும் சிறிது உப்பு சேர்த்து குக்கரில் வேகவைத்து எடுக்கவும்.
- எண்ணெய் ஊற்றி பாதி வெங்காயம்( ½), தக்காளி( 2), புதினா, கொத்தமல்லி(½)முதலியவற்றை நன்றாக வதக்கி அரைத்து வைக்கவும்.
- தேங்காய்,ஊறவைத்த முந்திரி பருப்பை தனியாக அறைத்து வைக்கவும்.
- பிறகு மீண்டும் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கவும்.
- பின் மீதமுள்ள பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
- பின் மீதமுள்ள பொடியாக நறுக்கிய தக்காளி(2) சேர்த்து நன்கு குலையும் வரை வதக்கவும்.
- வேகவைத்த பட்டாணி, வேகவைத்து நறுக்கிய உருளைகிழங்கு சேர்த்து ஒரு முறை கிளறி விடவும்.
- இப்போது உப்பு, மஞ்சள் தூள், கறிமசாலா, கரம் மசாலா, சேர்த்து வாசனை போகும் வரை கிண்டவும்.
- பிறகு அரைத்து வைத்த மசாலா உடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி விடவும்.
- கடைசியாக அரைத்து வைத்த தேங்காய் கலவை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இறக்கவும். சுவையான கிரீன் பீஸ் ஆலு மசாலா தயார்
(குறிப்பு : இதே முறையில் பட்டாணி, உருளை கிழங்கு சேர்க்காமல் எளிதான தக்காளி குருமாவாகவும் செய்யலாம். முந்திரி பருப்பை பத்து நிமிடம் ஊறவைத்தால் போதும்.)
Related Article:
No comments:
Post a Comment
கருத்துக்களை வரவேற்கிறோம்............!