Blogroll

Thursday, 27 September 2012

Channa Masala

Channa Masala
தேவையான பொருட்கள்
            வெள்ளை கொண்டைக்கடலை – 1கப்
              பெரிய வெங்காயம் – பெரியது 1
              மஞ்சள் தூள் – 1 Spoon
              மிளகாய் தூள் – 2 Spoon
              வெள்ளை பூண்டு – 12
              தக்காளி – பெரியது 2
              பச்சைமிளகாய் – 2
              கரம் மசாலா – 1 Spoon
              கொத்தமல்லி இலை – ½ கப்
              ஜீரகம் – 1 Spoon
              நெய் – 6 Spoon
              உப்புதேவையான அளவு
செய்முறை
  • கொண்டைக்கடலையை முதல் நாளே ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
  • இதனுடன் ½ Spoon மஞ்சள் தூள்  1 Spoon மிளகாய் தூள் நீளவாக்கில் பொடியாக நறுக்கிய வெள்ளை பூண்டு( 8) அனைத்தையும் தண்ணீர் ஊற்றி குக்கரில் நன்கு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
  • வேகவைத்து எடுத்த கொண்டைக்கடலையில் சிறிது( ¼ பங்கு) தனியாக எடுத்து அரைத்து வைக்கவும்.
  • பின் பெரிய வெங்காயம்  ¼பாகத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். மீதியை அரைத்து வைக்கவும்.
  • 1 தக்காளியை பொடியாக நறுக்கி விட்டு மற்றொன்றை அரைத்து வைக்கவும்.
  • இப்போது அடுப்பை பற்றவைத்து கடாயில் நெய் ஊற்றி சீரகம் போடவும், பொரிந்ததும் மீதி உள்ள பொடியாக நீளவாக்கில் நறுக்கிய பூண்டு(4) பச்சை மிளகாய்,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • நன்கு வதங்கியதும் நறுக்கிய தக்காளியையும் சேர்த்து மசியும் வரை வதக்கவும்.
  • பிறகு மீதமுள்ள மஞ்சள் தூள்(½),மிளகாய்தூள்( 1),கரம் மசாலா( 1) சேர்த்து மசாலா வாசனை போகும்வரை வதக்கவும்.
  • பின் வேகவைத்த கொண்டைகடளையையும் இதனுடன் சேர்க்கவும். (வேகவைத்த தண்ணீர் அல்லது தனியாக சிறிது தண்ணீர் ஊற்றி  2நிமிடம் வேகவிடவும்.)
  • இறுதியாக அரைத்து வைத்த கொண்டைக்கடலையையும்,தக்காளியையும்   இதனுடன் சேர்த்து நன்கு கிளறவும்.இறக்குவதற்கு முன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவவும்.சுவையான சன்னா மசாலா தயார்.   


Related Article:

No comments:

Post a Comment

கருத்துக்களை வரவேற்கிறோம்............!